திருவண்ணாமலை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது அதன்படி 21,16,163 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களைவிட பெண்களே அதிகமாக இருப்பதாக ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மொத்தம் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 3.11 கோடியும், பெண்கள் 3.24 கோடியும் உள்ளனர். இந்த பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டார்.
தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ந் தேதியை தகுதியேற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்தது. அதற்காக கடந்த அக்டோபர் மாதம் 29-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 28-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி தற்போது தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம்:
அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.1.2025-ம் தேதியை அடிப்படையாக கொண்ட இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் நேற்று வெளியிட்டார்.
இந்த இறுதி வாக்காளர் பட்டியலில் 10,33,948 ஆண்கள், 10,82,085 பெண்கள், 130 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 21,16,163 வாக்களர்கள் உள்ளனர். அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.
இப்பட்டியல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அந்தந்த பகுதி வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை:
- செங்கம்: 2,84,371
- திருவண்ணாமலை: 2,78,347
- கீழ்பென்னாத்தூர்: 2,59,455
- கலசப்பாக்கம்: 2,54,182
- போளூர்: 2,45,118
- ஆரணி: 2,82,806
- செய்யார்: 2,64,245
[ஆண்கள்: 128880 பெண்கள்: 135357 மூன்றாம் பாலினம்: 8] - வந்தவாசி: 2,47,639
[ஆண்கள்: 121462 பெண்கள்: 126173 மூன்றாம் பாலினம்: 4]
வந்தவாசி சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் இங்கே கிளிக் செய்க
அனைத்து தொகுதிக்கான வாக்காளர் பட்டியலினை https://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்.
மேலும் இந்த பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பினால் வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம். மேலும் https://voters.eci.gov.in/ இணைதளம் அல்லது Voter Helpline App செயலி மூலமாக விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் திருத்தம் போன்ற பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி மாவட்ட தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1950 அல்லது 180042521950 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.