திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி, 2 நாட்களில் மட்டும் ரூ.10.5 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாஸ்மாக் சார்பில், திருவண்ணாமலை, வந்தவாசி, ஆரணி, செய்யாறு, போளூர் உட்பட திருவண்ணாமலை மாவட்டத்தில் 206 அரசு மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் மூலம், கடந்த 31-ந் தேதி மற்றும் 1-ந் தேதி என 2 நாட்கள் மதுபானம் விற்பனை அதிகளவில் நடந்துள்ளது. அதன்படி கடந்த 31-ந் தேதி ரூ.5 கோடியே 60 லட்சத்திற்கும், நேற்று 1-ம் தேதி ரூ.4 கோடியே 96 லட்சத்திற்கும் என ரூ.10 கோடியே 56 லட்சத்திற்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.