பொங்கலுக்கு சென்னையில் இருந்து வந்தவாசிக்கு வருவோர்.. கிளாம்பாக்கம் மெயின் பஸ் ஸ்டாண்ட் போகாதீங்க..

வந்தவாசி மக்களே.. சென்னையில் வேலை செய்துக் கொண்டிருக்கும் வந்தவாசி சொந்தங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி.

பேருந்து நிறுத்தம் - அறிவிப்பு பலகை


சென்னையில் இருந்து திருவண்ணாமலை, வந்தவாசி, போளூர், சேத்பட் செல்வோர் கிளாம்பாக்கம் வெளியூர் செல்லும் பேருந்து நிலையத்தின் 7 ஆவது நடைமேடைக்கு செல்ல வேண்டாம். 

சென்னை மாநகரில் இருந்து  நகரப் பேருந்துகளில் வந்து இறங்கியதும், மாநகர பேருந்து நிலையத்திலேயே, 10 மற்றும் 11 ஆவது நடைமேடைகளில், அதாவது ஆவடி, மாதவரம் பேருந்து நிற்கும் நடைமேடைகளில்,  திருவண்னாமலை, வந்தவாசி, போளூர், சேத்பட் செல்லும் சிறப்பு பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருக்கும். அங்கு, உடனுக்குடன் பேருந்துகள் இயக்கப்படுவதால், சீட் பிடித்து நிம்மதியாக சொந்த ஊருக்கு செல்லலாம்.

பொங்கல் கொண்டாட பொதுமக்கள் சிரமமின்றி,  சொந்த ஊர் செல்ல தமிழ்நாடு அரசு செய்துள்ள இந்த ஏற்பாட்டை பயன்படுத்திக் கொள்ளவும்.



புதியது பழையவை