வந்தவாசி ஒன்றியம் தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் புகையில்லா போகி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் க. வாசு தலைமை தாங்கினார். எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் வரவேற்றார். ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா.சீனிவாசன், சு.தனசேகரன், வந்தை பிரேம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, வட்டார கல்வி அலுவலர் ஆர். செந்தமிழ் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் புகையில்லா போகி விழிப்புணர்வு தகவல்களை மாணவர்களுக்கு விளக்கினார். இந்த நிகழ்வில் கலைஞர் முத்தமிழ் சங்க தலைவர் வந்தை குமரன், சமூக ஆர்வலர் மனோஜ் குமார், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் அ.ஷாகுல் அமீது உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக மாணவர்கள் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணியாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திருமதி .செந்தாமரை இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் விஜய பாரதி ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இறுதியில் பள்ளி ஆசிரியை திருமதி. திலகவதி நன்றி கூறினார்.