திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி, அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதி கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதாகும் விமல்ராஜ் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் இருவரும் தங்களது செல்பேசி எண்ணை பரிமாறிக் கொண்டு அடிக்கடி பேசி வந்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்னர் விமல்ராஜ், அந்த சிறுமியை பார்ப்பதற்காக தேனியில் இருந்து அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் சிறுமி தனியாக இருந்ததை பார்த்த விமல்ராஜ், திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைவார்த்தை கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர்ஓடி வந்து, அந்த இளைஞ்சரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் சிறுமியின் தாயார் அளித்த புகார் பெயரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தேனி இளைஞரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.