வந்தவாசி: பள்ளத்தில் கார் கவிழ்ந்தது - 4 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்

விபத்துக்குள்ளான கார்

வந்தவாசியை அடுத்த மழையூர் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பவர் தனது நண்பர்கள் 3 பேருடன் காரில் சேத்துப்பட்டை நோக்கி சென்றார். அப்போது, எட்டித்தாங்கல் கிராமம் அருகே நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டர் மீது கார் மோதாமல் இருக்க காரை வலது புறத்தில் திரும்பிய போது நிலைத்தடுமாறி சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் விபத்துக்குள்ளான காரை டிராக்டர் மூலம் கயிறு கட்டி பள்ளத்தில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டது.

புதியது பழையவை