வந்தவாசி அருகே கார் மோதி இளைஞர் பலி

வந்தவாசியை அடுத்த ஆணைபோகி கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 30), கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். வந்தவாசிக்கு சொந்த வேலையாக பஸ்சில் சென்று வந்த அவர், வட வணக்கம்பாடி கூட்டுச்சாலையில் பஸ்சில் இருந்து இறங்கிய போது, எதிர்திசைக்கு செல்ல சாலையை கடந்துள்ளார். அப்போது அவ்வழியாக  சென்ற கார் பிரசாந்த் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதையடுத்து, சில கிலோமீட்டர் தூரம் விரட்டிச்சென்ற பொதுமக்கள், அதைப் பார்த்த கார் டிரைவர் மழையூர் கிராமம் அருகே காரை நிறுத்திவிட்டு தப்பிச்சென்று விட்டார்.

இதையடுத்து காயமடைந்த பிரசாந்தை வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

புதியது பழையவை