கார்த்திகை தீப விழா: வந்தவாசி வெண்குன்றம் தவளகிரீஸ்வரர் மலை கோவிலில் ஏறுவதற்கு தடை

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வந்தவாசி, வெண்குன்றம் கிராமத்தில் உள்ள தவளகிரீஸ்வரர் மலை கோவிலில் ஏறுவதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

1440 அடி உயரம் கொண்ட தவளகிரீஸ்வரர் மலைக்கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத் திருவிழா அன்று மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இதில் வந்தவாசி மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.

இந்த நிலையில் கார்த்திகை மகா தீபத்தை முன்னிட்டு மலை உச்சியில் வருகிற 13-ந் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த மலைக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புனரமைப்பு பணி செய்வதற்காக கடந்த ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டது. இதனால் கடந்த ஆண்டும் பக்தர்களுக்கு மலை ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தாண்டும் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.



Vandavasi Malai Deepam 2024

புதியது பழையவை

பிரபலமான பதிவுகள்