- பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களை கட்டாய தேர்ச்சி அடையச் செய்யும் ஆல் பாஸ் முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
- தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி நடைமுறை தொடரும் என்று அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை மற்றும் முதலை பண்ணையில் இருந்து பெண்ணையாற்றில் 150-க்கும் மேற்பட்ட முதலைகள் வெளியேறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், இதனை தமிழக அரசு மறுத்துள்ளது.
- பேருந்துகளை இயக்கும்போது டிரைவர்கள் செல்போன் பேசினால் 29 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அரசு போக்குவரத்து கழகம் கடுமையாக எச்சரித்துள்ளது.
- கோவில், தேவாலயம், மசூதியாக இருந்தாலும் விதிமீறி கட்டினால் இரக்கம் காட்ட முடியாது என்று சென்னை உயர்நிதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
- ‘மேல்மா கிராமத்தில் சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தப்படும். எங்களுடைய மாவட்டத்தின் மீது எங்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு எப்படி திடீரென்று முளைத்துக்கொண்டது’ என்று பா.ம.க.வுக்கு அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார்.
- வந்தவாசியை அடுத்த இந்திரா நகரில் ஹாரிஸ் பாஷா, சேட்டு, ரமேஷ் ஆகியோரது பெட்டி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து கடைகளில் இருந்து ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். உணவு பாதுகாப்புத்துறை வட்டார அலுவலர் மற்றும் பொன்னூர் போலீசார் 3 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.