தமிழ்நாட்டில் இரயில்களின் வேகத்தை அதிகப்படுத்துவதற்கு தண்டவாளங்களை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்களவையில் ஆரணி திமுக எம்.பி. எம். எஸ். தரணிவேந்தன் கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த மூன்றாண்டுகளில் வழித்தட மேம்பாடு மற்றும் அதன் பாதுக்காப்பை மேம்படுத்துதல், வேகத்தை அதிகப்படுத்தும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றிற்காக ஒதுக்கப்பட்ட நிதித்தொகை திட்டங்களை முடிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட கால இலக்கு ஆகியவற்றையும் அறிவிக்குமாறு அவர் கோரியுள்ளார்.
அதேபோல் மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து இத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் திட்டங்களின் நிலையை அவ்வப்போது கண்காணித்து பொதுமக்களுக்கு அறிக்கை வெளியிடுவதற்கான வழிமுறைகளையும் ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.