திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: வேளாண்மை துறை தகவல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் மாநில அளவிலான டாக்டர் நாராயணசாமி நாயுடு விருது நெல் உற்பத்திக்கான போட்டியில் பங்கு பெற்று பரிசுத் தொகை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக வேளாண்மை இணை இயக்குனர் கண்ணகி தெரிவித்துள்ளதாவது : 

விவசாயிகள் குறைந்த பட்சம் 2 ஏக்கர் பரப்பில் திருந்திய நெல் சாகுபடி செய்திருக்க வேண்டும். தொடர்ந்து 3 ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி செய்த முன்னோடி விவசாயியாக இருக்க வேண்டும்.

இப்போட்டியில் பங்கு பெற சிட்டா, அடங்கல், புகைப்படம் மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.150 செலுத்தி ஆவணங்களை தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். 

நில உரிமைதாரர்கள் மற்றும் குத்தகைதாரர்களும் பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

இப்போட்டியானது மாநில அளவில் நடத்தப்பட்டு அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கமும் அளிக்கப்படும். 

மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

புதியது பழையவை

பிரபலமான பதிவுகள்