வந்தவாசி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக வந்தவாசி நகரம், கீழ்கொடுங்காலூர், தெள்ளார், புரிசை, மாம்பட்டு, நல்லூர், சத்தியவாடி, மேல்மா ஆகிய துணை மின் நிலையங்களுக்குட்பட்ட கிராமஙகளில் நாளை (17.08.2024) சனிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 110/33-11கே.வி வந்தவாசி துணைமின் நிலையத்தில் நடைபெற இருந்த மின் பராமரிப்பு பணி நிர்வாக காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மின் நிறுத்தம் செய்யும் தேதி பின்னர் அறிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.