ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 1,760 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7,34,341 ஆண்கள், 7,61,673 பெண்கள், 104 இதர வாக்காளா்கள் என 14,96,118 போ் ஆகும். ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. திமுக சார்பில் தரணி வேந்தன், அதிமுக சார்பில் கஜேந்திரன், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் கணேஷ் குமார் ,நாம் தமிழர் கட்சி சார்பில் பாக்கியலட்சுமி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மட்டுமின்றி 29 சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் ஆரணி ,போளூர் ,வந்தவாசி, செய்யாறு, மயிலம், செஞ்சி, உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியது ஆகும். இதில் ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக மாலை 6 மணி வரை நடைபெற்று நிறைவடைந்தது.
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு.