வந்தவாசியில் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

வந்தவாசியில் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.



திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திரம் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏழாவது நாளான நேற்று தேரோட்டம் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது. 

முன்னதாக ஸ்ரீ ரங்கநாதர் பெருமாளுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் மற்றும் ஸ்ரீ ரங்கநாயகி தாயார் உற்சவர் சிலையை தேரில் அமர்த்தப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. 

இந்த தேரோட்டமானது வந்தவாசி காந்தி சாலை, அச்சரப்பாக்கம் சாலை, கே ஆர் கே தெரு, சன்னதி தெரு வழியாகச் சென்றது. 

இந்த சிறப்புமிக்க தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

புதியது பழையவை

பிரபலமான பதிவுகள்