ஆரணி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளராக கணேஷ் குமார் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வந்தவாசியில் 108 தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு செய்து பிரச்சாரத்தை தொடங்கினார்.
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாமக தலைமை வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் ஆரணி தொகுதிக்கு கணேஷ்குமார் அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, கட்சியினர் வந்தவாசி கோட்டை ஆஞ்சநேயர் கோவிலில் 108 தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். பின்னர் பஜார் சாலையில் ஊர்வலம் சென்று தேரடி பகுதியில் உள்ள வழித்துணை விநாயகர் கோவிலில் 108 தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பின்னர் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலின் தேரின் வடம்பிடித்து இழுத்து தன்னுடைய பிரச்சாரத்தை கணேஷ்குமார் தொடங்கினர். பின்னர் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணேஷ்குமார் வீதி வீதியாக சென்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.