ஆரணி நாடாளுமன்ற தொகுதி: 32 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

ஆரணி நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி கடந்த 27 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி, சுயேச்சை வேட்பாளார்கள் உள்பட மொத்தம் 48 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த நிலையில் நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

அப்போது ஒவ்வொரு வேட்பு மனுவையும் அதில் இணைக்கப்பட்டு உள்ள ஆவணங்களை சாிபார்த்து ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதை மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.

இதில் ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு தாக்கல் செய்யப்பட்ட 48 வேட்பு மனுக்களில்...

1. எம்.எஸ்.தரணிவேந்தன் (தி.மு.க.),

2. ஜி.வி.கஜேந்திரன் (அ.தி.மு.க.), 

3. அ.கணேஷ்குமார் (பா.ம.க.)

4. கே.பாக்கியலட்சுமி (நாம் தமிழா் கட்சி)

உள்பட 32 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. மீதமுள்ள 16 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

புதியது பழையவை

பிரபலமான பதிவுகள்