வந்தவாசி - விளாங்காடு சாலையில் வழிப்பறி.. உத்திரமேரூரைச் சேர்ந்த இளைஞர்கள் கைது

வந்தவாசி அருகே இரும்பேடு கிராமம் பகுதியில் சாலையில் சென்ற இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


(Vandavasi - Uthiramerur Road - Robbery)

வந்தவாசியை அடுத்த விளாங்காடு கிராமத்தை சேர்ந்த தமிழரசன் என்கிற இளைஞர் என்பவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் உத்திரமேரூரில் இருந்து விளாங்காடுக்கு சென்றார். வந்தவாசி - விளாங்காடு சாலை, இரும்பேடு கிராமம் அருகே செல்லும் போது திடீரென காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் தமிழரசனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் வழூர் கூட்டுச்சாலை அருகே  நேற்று காலையில் போலீசார்வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (26),  பிரசன்னா (24), விஜி (27),  இசான்முகமது (24), முனிரத்தினம் (23) என்பது தெரியவந்தது. அவர்கள் 5 பேரும் சேர்ந்துதான் தமிழரசனிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் உள்ளிட்டவற்றை பறித்து சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து 5 இளைஞர்களையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த கார், 2 கத்தி, செல்போன், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

புதியது பழையவை

பிரபலமான பதிவுகள்