வந்தவாசி டூ கிளாம்பாக்கம் டிக்கெட் எவ்வளவு தெரியுமா..?

வந்தவாசியில் இருந்து சென்னைக்குள் செல்ல இனி கிளாம்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து இன்னொரு பேருந்தோ, ரயிலையோ பிடித்து தான் செல்ல வேண்டும். கோயம்பேடு வரை செல்லவோ, அல்லது வட சென்னைக்கு செல்லவோ தேவைப்பட்டால், மாதவரம் வரை வந்தவாசியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.


பிளாட்பார்ம்:

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், பெருங்களத்தூருக்கு முன்னாடியே வண்டலூருக்கு சற்று முன்னதாக அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு சென்னையில் இருந்து அரசு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து வந்தவாசிக்கு வர வேண்டும் என்றால், அங்குள்ள 7 ஆம் எண் பிளாட்பாரத்தில் இருந்து பேருந்து ஏற வேண்டும்.

டிக்கெட் கட்டணம்:

வந்தவாசியில் இருந்து கோயம்பேடு வரையிலான பயணத்திற்கு கட்டணம் ரூ. 93 வசூலிக்கப்பட்டது. தாம்பரம் வரையிலான பயணத்திற்கு ரூ. 72 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. 

இனி கிளாம்பாக்கம் வரையில்தான் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படும் என்பதால், வந்தவாசியில் இருந்து கிளாம்பாக்கம் வரையிலான பயணத்திற்கு ரூ. 68 வசூலிக்கப்படுகிறது.

புதியது பழையவை

பிரபலமான பதிவுகள்