வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோவில் புதிய தேர் தயார்.. முக்கிய வீதிகளில் வெள்ளோட்டம் !

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோவிலின் புதிய தேரின் வெள்ளோட்டம் நடைபெற்றது. 



வந்தவாசியில் தேரடி பகுதியில் ஊள்ள அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோவில், அருள்மிகு ரங்கநாதர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 2 தேர்கள் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்து உடைந்து போனது.

இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த 2 கோவிலுக்கு புதிய தேர்கள் செய்து தர வேண்டும் என்று வந்தவாசி நகர பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

கடந்த அதிமுக ஆட்சியில், 2 புதிய தேர்கள் செய்வதற்காக ரூ. 63 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த அரசு நிதியோடு பொதுமக்களின் நிதியையும் பெற்று தேர் செய்யும் பணி தொடங்கப்பெற்றது.

கடந்த ஆண்டு ரங்கநாத பெருமாள் கோவிலின் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான புதிய தேர் செய்து முடிக்கப்பட்டு தேரின் வெள்ளோட்டம் நேற்று (பிப்ரவரி 16) நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

தேர் வந்தவாசி தேரடி பகுதி, பஜார் சாலை, அச்சரப்பாக்கம் சாலை, பாலு உடையார் தெரு, சன்னதி தெரு வழியாக சென்றது.
புதியது பழையவை

பிரபலமான பதிவுகள்