பி.சி. / எம்.பி.சி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற பிப். 29 கடைசி நாள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிறப்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.




தகுதி:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

நடப்பாண்டில் புதிய மாணவர்கள் https://ssp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் student login -ல் சென்று ஆதார் எண் அளித்து e-kyc verification செய்ய வேண்டும். கல்வி உதவித்தொகை இணையதளம் மூலம் புதியதிற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் வரும் பிப்ரவரி 29-ந் தேதிக்குள்  சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித் தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகி பயன்பெறலாம்.

புதியது பழையவை

பிரபலமான பதிவுகள்