வடசென்னையில் இருந்து வந்தவாசிக்கு பேருந்து சேவை.. கிளாம்பாக்கம் செல்ல வேண்டாம்...

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளின் இயக்கத்தை தமிழ்நாடு அரசு நிறுத்தி உள்ளது. அதன் படி, சென்னையில் இருந்து வந்தவாசிக்கு செல்ல வேண்டும் என்றால், கிளாம்பாக்கம் சென்றுதான் பேருந்து ஏற வேண்டும். இது வடசென்னை பகுதியில் உள்ள மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. 




இதற்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் பேருந்துகளை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதன் படி, வந்தவாசி, போளூர் செல்லும் பேருந்துகள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மணிக்கொரு முறை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. அதேபோல், வந்தவாசியில் இருந்து மாதவரம் வரை பேருந்து சேவை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல்ம் செஞ்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



புதியது பழையவை

பிரபலமான பதிவுகள்