வந்தவாசி நகராட்சி பூங்கா... எதற்குதான் இருக்கு?

வந்தவாசியில் பூங்கா இருக்கா...? இதுதான் நிறைய பேரோட முதல் கேள்வியா இருக்கும்.. ஆமாங்க. பூங்கா இருக்கு... ஆனா நீங்க நினைக்கிற மாதிரி இல்லை.

வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகிலேயே விளையாட்டு பூங்கா மற்றும் குளம் அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்  திறக்கப்பட்டது. இதற்காக எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹42 லட்சம் செலவிடப்பட்டது. ஆனால், கடந்த ஓராண்டில் இந்த பூங்காவின் நிலைமை முழுமையாக பயன்படுத்த முடியாத சூழலில் தான் இருக்கிறது.

இங்கு 3 ஊஞ்சல், 3  ஏற்ற-இறக்கம் தவிர, நடைபாதை மட்டுமே உள்ளன. அவை எந்த பராமரிப்பும் இன்றி அச்சம் தரும் நிலையில் ஊஞ்சாலிக்கொண்டிருக்கின்றன. 




வந்தவாசி நகரில் இருந்து மாலை நேரத்தில் இந்த பூங்காவுக்கு ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தையுடன் வருகின்றனர்.

ஆனால், விளையாடுவதற்கு உரிய உபகரணங்கள் இல்லாததால், ஏதோ ஆசைக்காக ஊஞ்சலில் மட்டும் ஜாக்கிரதையாக ஆடிவிட்டு அழைத்து செல்கின்றனர்.

எதற்குதான் இவ்வளவு செலவு செய்து பூங்காவை அமைத்தார்களோ தெரியவில்லை... எல்லாம் வீணாகி இருக்கு என்று பொதுமக்கள் கடிந்து செல்கின்றனர்.

ஓகே சொல்ல ஏதாவது இருக்கா என்றால், நடைபயிற்சி செய்ய நடைபாதை மட்டும் அப்படியே உள்ளது.

தற்போது, நகராட்சி தேர்தல் நடக்க உள்ள சூழலில் புதிதாக பொறுப்பேற்க உள்ள நகராட்சி நிர்வாகமானது கவனத்தில் கொண்டு, பூங்காவை மேம்படுத்துவதோடு, முழு பயன்பாட்டை உறுதி செய்ய முயற்சிக்க வேண்டும்.

தற்போது வந்தவாசி பூங்காவை காலை 5 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்துள்ளார்கள்.

(Location: Vandavasi Park - Near New Bus Stand)

புதியது பழையவை

பிரபலமான பதிவுகள்