வந்தவாசி வட்டம், சென்னாவரம் ஊராட்சியில் ஊராட்சிக்கு வரும் பெருநகர் - நல்லூர் கூட்டு குடிநீர் மழையினால் 15 நாட்களாக பழுதுதடைந்தமையால் கிராம மக்களுக்கு நகராட்சி மூலம் தண்ணீர் டேங்க் வண்டி வைத்து வழங்கப்பட்டது. மேலும் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.சே.வீரராகவன் அவர்கள் ஏற்பாட்டில் பொது மக்களின் தண்ணீர் தேவை உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டது. இதனை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.இரா.குப்புசாமி அவர்கள் பார்வையிட்டார்.